மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் திடீர் பள்ளம்

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் 60 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்ட துறைமுகத்தில்,நடைபாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.


60 கோடி செலவில் கட்டப்பட்ட துறைமுகத்தை
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக திறந்து வைத்தார்.


மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாகவும்,சுற்றுலா தளமாகவும் மல்லிப்பட்டிணம் இருந்து வருகிறது,மேலும் துறைமுகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதிகள் உள்ளன.


இந்நிலையில் மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் நடைபாதை ஒருபகுதி சரிந்து விழுந்துள்ளது.ஏற்கனவே இதுபோன்று கடந்த முறையும் நடைபாதை சரிந்து விழுந்தது, சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி உடைந்து விழும் கண்ணாடி போல் ஆகி விடுமோ மல்லிப்பட்டிணம் துறைமுகம் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.


இவ்வளவு கோடி செலவில் கட்டப்பட்ட துறைமுகம் தரமற்றதாக இருக்கிறது என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர்.