கோல்கட்டா: தென் ஆப்ரிக்க தொடர் ரத்து செய்யப்பட்ட விஷயத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி இடையில் உரசல் ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்க இருந்தது. முதல் போட்டி மழையால் ரத்தாக, அடுத்த இரு போட்டிகள் கொரோனா வைரஸ் அச்சத்தில் கைவிடப்பட்டது. வழக்கமான அட்டவணைப்படி தென் ஆப்ரிக்க வீரர்கள் கோல்கட்டாவில் நடக்கும் மூன்றாவது போட்டிக்குப் பின் (மார்ச் 18) நாடு திரும்ப இருந்தனர். இதனிடையே கோல்கட்டாவில் நடக்க இருந்த போட்டியை ரத்து செய்தது குறித்து, போலீசாருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது.
முதல்வரா... தலைவரா! மம்தா-கங்குலி உரசல்