மனைவி ரொம்ப குண்டு.. சுனிதா ஸ்லிம் பியூட்டி.. பத்திக்கிச்சு.. திரிஷ்யம் பாணியில் கொலை..சிக்கிய கணவர்மனைவி ரொம்ப குண்டு.. சுனிதா ஸ்லிம் பியூட்டி.. பத்திக்கிச்சு.. திரிஷ்யம் பாணியில் கொலை..சிக்கிய கணவர்

திருவனந்தபுரம்: "என் மனைவி வித்யா குண்டாக இருப்பாள்.. ஆனால் சுனிதா ஸ்லிம் & ப்யூட்டியாக இருப்பாள்.. பழைய காதல் எனக்கும் சுனிதாவுக்கும் பத்தி கொண்டது.. அதனால் த்ரிஷ்யம் பட பாணியில் வித்யாவை கொன்றோம்" என்று கணவன் வாக்குமூலம் தந்துள்ளார். கேரளா கோட்டையம் பகுதியை சேர்ந்த தம்பதி பிரேம்குமார் - வித்யா. போன 22ம் தேதி வித்யாவை காணவில்லை என்று பிரேம்குமார் உதயம்பூர் போலீசில் புகார் தந்தார்.


அதனால் போலீசாரும் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது வித்யாவின் செல்போன் சிக்னல் பீகார் இடத்தை காட்டியது.. அதனால் இது சம்பந்தமான விசாரணையில் போலீசார் இறங்கினர். இதனிடையே நெல்லையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு காட்டில் சடலத்தை வீசப்பட்டுள்ளதாக ஒரு தகவல் கிடைத்தது. அது யார் என்ன என்று விசாரித்தால் காணாமல் போன வித்யா என்பது தெரியவந்தது.



மனைவியை யாரோ கொன்றுவிட்டார்கள் என்றற அதிர்ச்சி தகவலை பிரேம்குமாருக்கு சொல்ல போலீசார் முயன்றனர். ஆனால், பிரேம்குமார் வேறு ஒரு பெண்ணுடன் நெல்லையிலேயே குடும்பம் நடத்தி கொண்டிருப்பதை பார்த்ததும் அதிர்ந்தனர்.. அதனால் பிரேம்குமார் மீது சந்தேகம் எழுந்தது.. அவரது செல்போன்கள் மறைமுகமாக ஆய்வு செய்யப்பட்டன.